அனைவரையும் அன்பாய் நேசி 💞தனி மனித ஒழுக்கமே சிறந்தது.
💐💐🌹
இன்றைய சிந்தனை
……………………………
‘’ஈடுபாடு இல்லாமல் செய்யும் வேலை.."
................................
உங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு போதுமான ஈடுபாட்டை நீங்கள் காட்டவில்லை என்றால் அது வெறும் வேலையாகத் தான் இருக்கும்.
ஒரு வேலையை நன்றாகச் செய்து முடித்த பிறகு கிடைக்கும் திருப்தி அலாதியானது.🔵
வேலையை அனுபவித்து,, ஈடுபாட்டுடன், செய்யாமல், கடமையே என ஈடுபாடின்றிச் செய்தால், அந்தத் திருப்தியை என்றைக்குமே உங்களால் உணர முடியாது. 🌹💛
ஆகவே, உயர்ந்த அளவுகோல்களை நிர்ணயிங்கள். முடிந்த அளவுக்கு வேலையைச் சிறப்பாக, தரமாக, ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.
மற்றவர்கள் அப்படித் தான் செய்கிறார்கள் என்று நீங்களும் ஏனோ தானோ என்று வேலை செய்ய வேண்டாம்.
நீங்கள் செய்யும் வேலையின் தரமானது உங்கள் மதிப்பை வெளிப்படுத்துகிறது.. செயலில் இறங்கி விட்டால் கவலைப்பட நேரம் இருக்காது.. 💙
வீட்டை அழகாக வைத்து இருக்க விரும்பிய ஒருவர் நிறைய செடி கொடிகளை நட்டு வைத்தார்., உரமிட்டார் .நீர் பாய்ச்சினார்..
ஆனால் அவர் பார்த்த அளவு செடிகள் பெரிதாக வளரவில்லை. என்ன செய்வது என்று யோசித்தார்..
ஒரு நண்பரின் ஆலோசனைப்படி பக்கத்தில் இருந்த பூங்காவைப் பராமரிக்கும் வயதான ஒரு பெரியவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.
இரண்டே மாதங்களில் செடி செழித்து தழைத்து வளரத் தொடங்கியது வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு.அதே தண்ணீர். அதே உரம். அதே இடம்.
இது எப்படி சாத்தியம்?
அந்தப் பெரியவர் சொன்னார்..,
நீங்கள் அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் நீர் பாய்ச்சுகிறீர்கள். நான், குழந்தைக்கு உணவு தரும் தாயின் மனநிலையில் இருந்து நீர் பாய்ச்சுகிறேன் என்றார்.. ..."💙
அப்போது தான் உரிமையாளருக்குப் புரிந்தது.எந்த வேலையையும்.. முழு ஈடுபாடு இல்லாமல் செய்தால் முழுப் பயன் தராது.. என்று...
ஆம்.,நண்பர்களே..
வேலையில் ஆர்வமும்., பொறுமையும் வேண்டும்., இது எல்லாவற்றை விட, எந்த செயலில் ஆர்வம், ‘ஈடுபாடு இல்லாமல் செய்தால் அது வெற்றி பெறாது...
💐💐💐
தினம் ஒரு குட்டிக்கதை
மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு பெற்றோரின் உணர்வுப் பூர்வமாக எச்சரிக்கை...!!!🟨
_*தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் தந்தையிடம் கேட்டாள்... ஏன் என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று...*_
_*ஆனால் அதை தந்தை சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்...*_
_*ஒரு நாள் மகள் தன் தந்தையிடம் வந்து கேட்டாள்.. நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்...*_
_*பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் தந்தை கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா??? என கேட்டார்...*_
_*மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் தந்தை அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்...*_
_*அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...*_
_*தந்தை சொன்னார்.. .. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை அடைய இந்த நூல் உதவியாய் இருக்கிறது...*_
_*இதேபோலத்தான் உன் பெற்றோர் ஆகிய நாங்களும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனது போல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...*_
_*இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் புரிந்து கொண்டாள்...!!!*_
_*ஆம் அன்பான பெண்களே உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது...*_
_*எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!!*_
பெற்றோரின் அன்பும், கண்டிப்பும் இருந்தால், வாழ்வு இனிமையாக அமையும்.