மகளிர் தினம்' ஏன் கொண்டாடுகிறோம்?
உலக மகளிர் தினம் ( International Women's Day).
ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொதுவிடுமுறை நாளாகும்.
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
18 ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர்.வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.
1857 ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.
இதனால் பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக் கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர், 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன் பிறகு 1907ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.
1920 ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.
தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான மகளிர் தின கருப்பொருளாக ஐ. நா முன்மொழிந்திருக்கும் நோக்கம், '' பெண்களுக்கு எதிரான வன்முறையை தக்க நேரத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வாக்குறுதி கொள்வோம்" என்பதே..
கருவில் மங்கையராய் பிறந்து
வயிற்றில் குழந்தைகளை சுமந்து
மார்பில் கணவனை தாலாட்டு
முதுகில் குடும்ப சுமைகளைத்
தாங்கும் மங்கையர்களுக்கு
மகளிர் தினம் ஒரு இனிய சமர்ப்பணம்...
மகளிர் தின வாழ்த்துக்கள்
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
*💗சிந்தனை கதை..*
*ஒரு சேயும்.. தாய் ஆகிறாள்...!!*
கிருஷ்ணன்
விடை தெரியாத கேள்விகளை சுமந்து கொண்டு போலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்.அங்கே நின்றுகொண்டு இருந்த மணமக்களை பார்த்து கொண்டே இன்ஸ்பெக்டர் முன்னாடி போய் அமைதியாய் அமர்ந்தார்.இன்ஸ்பெக்டர் அவரிடம் "சார் உங்க வேதனை ஒரு அப்பாவா எனக்கும் புரியுது.ஆனாலும் எங்களுக்கும் சில கடமைகள் மனசாட்சிய மீறி செய்ய வேண்டி இருக்கு.இனி நீங்க தான் முடிவு பண்ணனும்"என்றதும் கிருஷ்ணன் தனது செல்போனில் மனைவியை அழைத்தார் .
சில நிமிடத்திற்கு
பிறகு அவர் மனைவி மாலதி .கலங்கிய கண்களுடன் ஸ்டேஷனுக்குள் வந்தார் .தனது கையில் இருந்த பையை கிருஷ்ணனிடம் கொடுத்தார் .அதை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தப்படி "இதுல என் பொண்ணு கல்யாணத்திற்கு சேமித்து வச்ச நகைகள் ,பணம் இருக்கு.அவளுக்காக இன்ஸ்யூரன்ஸ்ல கட்டுன பணமும் முடிஞ்சு போச்சு .அதுவும் அவளுக்கு தான்.எங்க காலத்து அப்புறம் வீடும் எழுதி தர்றோம்.ஆனா எங்களுக்கு இந்த பொண்ணு வேணாம் சார்.தாங்க முடியல சார் .
இதுதுரோகம் .
பெத்தவங்களுக்கு புள்ளைங்க செய்யுற பச்ச துரோகம் .அவளோட பத்து வயசுல இருந்து நான் வெளியில டீ கூட சாப்டறது கிடையாது .அதை கூட சேமிச்சு வச்சேன் .எல்லாம் கனவா போயிருச்சு .பரவாயில்லை சார் நல்லா இருக்கட்டும் .ஆனா நாங்க செத்து போனாலும் பாக்க மட்டும் வரக்கூடாது"என்றவர் மாலதியுடன் வேகமாய் வெளியேறினார்.ஸ்டேஷனில் ஓரமாய் நின்றிருந்த காவ்யா .கண்ணீர் விட்டு கதறியப்படி மணமகன் கார்த்தியின் மீது சாய்ந்தாள் .
மாலதி
தன் நிலை மறந்து அந்த ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் சாய்ந்து கிடந்தார்.தனக்கான ஒரே துணையும் இப்போது உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை நினைத்து உடைந்து போனார் .இந்த ஆஸ்பத்திரியில் வைத்து டிரிட்மெண்ட் பாக்குற அளவுக்கு கையில் பணமும் இல்லை என்கிற நிலையில் டாக்டர் வந்து"அவருக்கு ரோம்ப நாளா இதயத்துல பிரச்சனை இருக்கு.இப்போ மோசமான சூழ்நிலையில் இருக்கார் .ஆபரேஷன் பண்ணனும் .உடனே பணத்த கட்டுங்க"என்றதும் உடைந்து போனார் .
மாலதி
தோள்களில் ஒரு கை ஆறுதலாக பற்ற திரும்பி பார்த்த மாலதி அது காவ்யா என்றதும் விலகி சென்றார்.அவர் அருகில் சென்ற காவ்யா "அப்பாக்கு ஹார்ட் ப்ராபளம் இருக்குன்னு எனக்கு முன்னாடியே தெரியும் .நானும் அவர் டிரிட்மெண்ட் பாத்துக்குவாறுக்கு எதிர் பார்த்தேன் .ஆனா எனக்கு பெரிய இடமா மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சுட்டார்.
அவர் அப்ப
இருந்த நிலையில் நான் சொல்றத அவர் கேட்க கூடிய நிலையில் இல்ல .அதனால தான் என் கூட படிச்ச .நம்மள மாதிரி சாதரண குடும்பத்த சேர்ந்த கார்த்திய கல்யாணம் செஞ்சுகிட்டேன்."என்றதும் கார்த்தி உள்ளிருந்து வந்து "காவ்யா பணம் கட்டியாச்சு.இன்னும் ஒரு மணி நேரத்துல ஆபரேஷன் பண்ணிருவாங்க"என்றதும் மாலதி தனது கைகளை உயர்த்தி நன்றி கூறினார் .
கார்த்தி
அவரிடம் "இது அவருடைய பணம் தான்ங்க .தன்னை பத்தி யோசிக்காத அப்பா.அப்பா பத்தி யோசிக்குற மகள் .அழகான இந்த குடும்பத்தில் நானும் ஒருத்தன்னு நினைக்கும் போது சந்தோசமாய் இருக்கு"என்றதும் மாலதி காவ்யாவை கட்டி பிடித்து கொண்டார் .
கிருஷ்ணன்
கண் முழித்ததும் தனது மகளை தேடினார்.அவர் முன்பு வந்து நின்ற காவ்யாவிடம் "என் மகளா?இல்ல அம்மாவாடா நீ?என்றதும் அவரது தலையை கண்ணீருடன் தலை கொதினாள்.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
The Old Lion
A lion, worn out with years, lay stretched upon the ground utterly helpless and drawing his last breath. A boar came up and, to satisfy an ancient grudge, drove at him with his tusks. Next a bull, determined to be revenged on an old enemy, gored him with his horns.
Upon this an ass, seeing that the old lion could thus be treated with impunity, thought that he would show his spite also. He came and threw his heels in the lion's face, whereupon the dying beast exclaimed; "The insults of the powerful were bad enough; those I could have managed to bear. But to be spurned by so base a creature as thou, the disgrace of nature, is to die a double death."
A lion, worn out with years, lay stretched upon the ground utterly helpless and drawing his last breath. A boar came up and, to satisfy an ancient grudge, drove at him with his tusks. Next a bull, determined to be revenged on an old enemy, gored him with his horns.
Upon this an ass, seeing that the old lion could thus be treated with impunity, thought that he would show his spite also. He came and threw his heels in the lion's face, whereupon the dying beast exclaimed; "The insults of the powerful were bad enough; those I could have managed to bear. But to be spurned by so base a creature as thou, the disgrace of nature, is to die a double death."